Thursday, May 2, 2013

Wednesday, May 1, 2013

தேவன் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா.....

அன்புடையீர் வணக்கம்...

தேவன் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா. 

05 -05 - 2013 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு,

தத்வாலோகா அரங்கில்  நடை பெற உள்ளது.. 

தத்வாலோகா, 76, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, 
சென்னை - 600 018)


விருது  பெறுவோர்:


சென்னை கம்பன் கழகச் செயலர்
இலக்கியவீதி இனியவன்


சிங்கப்பூர் எழுத்தாளர் 
ஜே. எம்.சாலி 


தலைமை -  விருது வழங்கல்:

முன்னாள் உள் துறைச் செயலர் - ஐ .நா.சபை கொள்கை ஆலோசகர்,

திரு பி.எஸ்.ராகவன், ஐ.ஏ.எஸ் (ஓய்வு ) 


இந்த இனிய விழாவிற்கு உறவும், நட்புமாக வருகைத் தர வேண்டுகிறோம்.. 

அழைப்பின் மகிழ்வில்; சாருகேசி

Sunday, February 13, 2011

'இலக்கியவீதி'யின் அன்பழைப்பு...

வணக்கம்..
நலனே விளைய வேண்டுகிறேன்..
* கல்வித் தலமனைத்தும் இலக்கியவீதி..
* கவிஞாயிறு தாராபாரதி நினைவு நூலகத் திறப்பு..
* 'கலைஞன்' மாசிலாமணி புகழஞ்சலி..
- ஆகிய நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை இணைத்துள்ளேன்..
வழக்கம்போல் ஒத்துழைப்பு அளிப்பீர்கள் என நம்புகிறேன்..
தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி..
விழாவில் சந்திப்போம்..
மீண்டும் வணக்கம்..
                                                                                                       - என்றென்றும் அன்புடன்..
                                                                                                         இலக்கியவீதி இனியவன்..   


Friday, January 7, 2011

கல்வித் தலமனைத்தும் இலக்கியவீதி...

வணக்கம்..
புத்தாண்டு - பொங்கல் வாழ்த்துகள்.. 
இத்துடன், 'இலக்கியவீதி' அழைப்பை இணைத்துள்ளேன்..
இனி, இளைய தலைமுறையை நோக்கி 'இலக்கியவீதி'யின் பயணம் தொடரும்.. உங்கள் வருகை, எங்களுக்கு உவகை.. 



                                                                           என்றென்றும் இதய அன்புடன்..
                                                                                இலக்கியவீதி இனியவன்..
                                                                                           9941224160 

Thursday, December 30, 2010

இலக்கியவீதி அழைப்பு


வணக்கம்...
நலனே விளைய வேண்டுகிறேன்..
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் இலக்கியவீதியின் தன்னம்பிக்கைத் திருவிழா அழைப்போடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்..
விழாவில் சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு..... உங்கள் இனியவன்..     

Saturday, March 20, 2010

மண்ணுயரம் கூட மலையுயரம்

வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.
கவிஞாயிறு  தாராபாரதி படைப்புகள் நாட்டுடைமையானதை அறிந்து என்னோடு தொடர்பு கொண்டு,மகிழ்ச்சியைப்  பகிர்ந்து கொண்ட,
அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் இதய நன்றி..

தாராபாரதியின்  தன்னபிக்கை கவிதை ஒன்றை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் மகிழ்கிறேன்...

இளைஞனே!
வீட்டுக்கு உயிர்வேலி ,
வீதிக்கு விளக்குத்தூண்;
நாட்டுக்குக் கோட்டைமதில்,
நடமாடும் கொடிமரம் நீ!

தேசியக் கொடிவிற்றுத்
தின்பண்டம் திரட்டுகிற
மோசடியை முறியடிக்க
முழங்கிவா இளம்புயலே!

புது வேகத்தோடு
புறப்படு! உன் உள்ளங்கை
விதிரேகை என்பதை
விஞ்ஞான  ரேகையாக்கு!

செவ்வாயில் செங்கரும்பு
சீக்கிரமாய் முளைக்கச்செய்!
எவ்வாய்க்கும்  நிலாச்சோறு
இன்றைக்கே கிடைக்கச் செய்!

உன்எடைக்கு முன்னே
உமிஎடைதான் இமயமலை;
உன்நடைதான்  இன்றுமுதல்
உலகநடை; எழுந்துநட

உன்னுயரம் தெரியமால்
உணர்வின்றிக் கிடப்பதனால்
மண்ணுயரம் அதுகூட
மலையுயரமாய்த் தெரியும்!

என்னுயரம் இதுவென்று
எழுந்துநில்! அப்போது
விண்ணுயரம் கூட உன்
விலாவுக்குக் கீழேதான்!

தசைகளுக்குக் கொஞ்சம்
தன்மானப் பயிற்சிகொடு
திசைகளைத் திருத்திநீ
தேசத்தைப் புதிதாக்கு!
- தாராபாரதி