Sunday, February 13, 2011

'இலக்கியவீதி'யின் அன்பழைப்பு...

வணக்கம்..
நலனே விளைய வேண்டுகிறேன்..
* கல்வித் தலமனைத்தும் இலக்கியவீதி..
* கவிஞாயிறு தாராபாரதி நினைவு நூலகத் திறப்பு..
* 'கலைஞன்' மாசிலாமணி புகழஞ்சலி..
- ஆகிய நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை இணைத்துள்ளேன்..
வழக்கம்போல் ஒத்துழைப்பு அளிப்பீர்கள் என நம்புகிறேன்..
தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி..
விழாவில் சந்திப்போம்..
மீண்டும் வணக்கம்..
                                                                                                       - என்றென்றும் அன்புடன்..
                                                                                                         இலக்கியவீதி இனியவன்..   


Friday, January 7, 2011

கல்வித் தலமனைத்தும் இலக்கியவீதி...

வணக்கம்..
புத்தாண்டு - பொங்கல் வாழ்த்துகள்.. 
இத்துடன், 'இலக்கியவீதி' அழைப்பை இணைத்துள்ளேன்..
இனி, இளைய தலைமுறையை நோக்கி 'இலக்கியவீதி'யின் பயணம் தொடரும்.. உங்கள் வருகை, எங்களுக்கு உவகை.. 



                                                                           என்றென்றும் இதய அன்புடன்..
                                                                                இலக்கியவீதி இனியவன்..
                                                                                           9941224160 

Thursday, December 30, 2010

இலக்கியவீதி அழைப்பு


வணக்கம்...
நலனே விளைய வேண்டுகிறேன்..
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் இலக்கியவீதியின் தன்னம்பிக்கைத் திருவிழா அழைப்போடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்..
விழாவில் சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு..... உங்கள் இனியவன்..     

Saturday, March 20, 2010

மண்ணுயரம் கூட மலையுயரம்

வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.
கவிஞாயிறு  தாராபாரதி படைப்புகள் நாட்டுடைமையானதை அறிந்து என்னோடு தொடர்பு கொண்டு,மகிழ்ச்சியைப்  பகிர்ந்து கொண்ட,
அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் இதய நன்றி..

தாராபாரதியின்  தன்னபிக்கை கவிதை ஒன்றை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் மகிழ்கிறேன்...

இளைஞனே!
வீட்டுக்கு உயிர்வேலி ,
வீதிக்கு விளக்குத்தூண்;
நாட்டுக்குக் கோட்டைமதில்,
நடமாடும் கொடிமரம் நீ!

தேசியக் கொடிவிற்றுத்
தின்பண்டம் திரட்டுகிற
மோசடியை முறியடிக்க
முழங்கிவா இளம்புயலே!

புது வேகத்தோடு
புறப்படு! உன் உள்ளங்கை
விதிரேகை என்பதை
விஞ்ஞான  ரேகையாக்கு!

செவ்வாயில் செங்கரும்பு
சீக்கிரமாய் முளைக்கச்செய்!
எவ்வாய்க்கும்  நிலாச்சோறு
இன்றைக்கே கிடைக்கச் செய்!

உன்எடைக்கு முன்னே
உமிஎடைதான் இமயமலை;
உன்நடைதான்  இன்றுமுதல்
உலகநடை; எழுந்துநட

உன்னுயரம் தெரியமால்
உணர்வின்றிக் கிடப்பதனால்
மண்ணுயரம் அதுகூட
மலையுயரமாய்த் தெரியும்!

என்னுயரம் இதுவென்று
எழுந்துநில்! அப்போது
விண்ணுயரம் கூட உன்
விலாவுக்குக் கீழேதான்!

தசைகளுக்குக் கொஞ்சம்
தன்மானப் பயிற்சிகொடு
திசைகளைத் திருத்திநீ
தேசத்தைப் புதிதாக்கு!
- தாராபாரதி

Friday, March 19, 2010

நாட்டுடைமையான தாராபாரதி படைப்புகள்

வணக்கம். நலம் இன்று ஒரு பொன்னான நாள்...
 இலக்கியவீதி தலைமுறையின் தலைமைக்கவிஞர்
கவிஞாயிறு  தாராபாரதி படைப்புகள் நாட்டுடைமை ஆகியுள்ளன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக மகிழ்கிறேன்..
தொடர்புகள் தொடரும் .

வெற்றியை எட்டும் எண்ணமிருந்தால்
ஒற்றைச் சிறகிலும் பறக்கலாம் -

 வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்.
                                                       - தாராபாரதி

Tuesday, March 16, 2010

வணக்கம்

அன்புள்ள வாசகர்களுக்கு,

இனியவனின் வணக்கங்கள்.

இந்த தளம் நம்மை இணைக்கும் ஒரு ஊடகமாக இருக்கும் என்பது மிகவும் மகிச்சியை அளிக்கிறது.
விரைவில் சந்திப்போம்.
அன்புடன்
இனியவன்